முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... முக்கிய நபரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை...

04:34 PM Mar 26, 2024 IST | Baskar
Advertisement

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

Advertisement

இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement
Next Article