கொடைக்கானல், ஊட்டி செல்வோருக்கு மீண்டும் சிக்கல்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
கொடைக்கானல், ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாகும். அந்த வகையில், இந்தாண்டும் கோடை வெயில் கொளுத்திய நிலையில், பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மே 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்தது.
இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், epass.tnega.org இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.
Read More : பத்திரப் பதிவுத்துறையில் இப்படி ஒரு வசதியா..? எல்லாம் முடிஞ்சு மறுநாளே..!! சூப்பர் அறிவிப்பு..!!