முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 3 பொருளே போதும்..!!
முந்தைய காலங்களில், வயதானவுடன் தான் உடல்நல பிரச்சனைகள் வரும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்த பிரச்சனைகள் இளைஞர்களிடமும் பரவலாக காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் முழங்கால் வலி (Knee Pain). உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் முழங்கால் வலியால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இன்றைய வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது மக்களின் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் தவறான உணவு, ஒழுங்கற்ற நடைமுறைகள் மற்றும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் தான். இதனால் தான் மூட்டு வலி பிரச்சனையும் அதிகரித்துள்ளது. ஒருசிலர் அதிலிருந்து விடுபட மருத்துவரை அணுகுகிறார்கள். ஒருசிலர் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகிறார்கள். அந்தவகையில், இன்று மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற சிறந்த வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
கற்பூர எண்ணெய் :
கற்பூர எண்ணெய் வலியை நிவர்த்தி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஸ்பூன் கற்பூர எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து, அதை சூடாக்கி, எண்ணெய் ஆறிய பிறகு, உங்கள் முழங்கால்களை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், சிறிது நேரம் கழித்து நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள்.
கற்றாழை :
கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனால் தான் இது முழங்கால் வலிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும். இது உங்களுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, வலியிலிருந்தும் நிவாரணமும் தரும். இது முழங்கால்களின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
மஞ்சள் :
மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்புப் பொருளாக பார்க்கப்படுகிறது. எவ்வித காயத்திற்கும் மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம், அது உள் வலியைப் போக்குகிறது. அதனால் தான் முழங்கால் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கடுகு எண்ணெயில் ஒரு டீஸ்பூன் மஞ்சளை போட்டு லேசாக சூடாக்கவும். பின் முழங்கால் வலி உள்ள பகுதியில் தடவவும். இது உங்களுக்கு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும்.
Read More : ”நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”..!! நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!!