கேஎல்.ராகுல் இன், ருதுராஜ் அவுட்!. ஆஸி. டெஸ்ட்க்கு எதிரான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!. ரசிகர்கள் அதிர்ச்சி!
IND vs AUS Test: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. வெளிநாட்டு தொடர் என்பதால் 15 பேரிலிருந்து 18 பேர் கொண்ட அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்று இருக்கிறார்.
மேலும் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் இளம் வீரர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் முகமது ஷமி காயம் சரியாகாததால் சேர்க்கப்படவில்லை. மேலும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டியும் இடம் பெற்று இருக்கிறார். இத்துடன் சுழல் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் அஸ்வின் மற்றும் ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்று இருக்கிறார். மேலும் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணிக்கு வழக்கம் போல் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் துணை கேப்டனாக பும்ரா தொடர்கிறார். அதே சமயத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்ராஜ் மற்றும் அதிவேக மயங்க் யாதவ் இருவரும் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.