Happy New Year 2025 : கிரிபாட்டி தீவுகளில் பிறந்தது புத்தாண்டு.. மக்கள் உற்சாக கொண்டாட்டம்..!!
உலகில் முதல் நாடுகளாக கிரிபாட்டி தீவுகள் 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான நாளாகும்.. பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்... அதை வைத்துதான் புத்தாண்டு பிறந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கிறது.
அதாவது இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணி என்றால், இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும்.. புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.. உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள்.. லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும்.. இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்
Read more : சாலையில் இருக்கும் விதவிதமான கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? – கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..