For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kilambakkam | இனி ரூ.40 இருந்தால் போதும்..!! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! புதிய வசதி அறிமுகம்..!!

07:31 AM Mar 01, 2024 IST | 1newsnationuser6
kilambakkam   இனி ரூ 40 இருந்தால் போதும்     கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்     புதிய வசதி அறிமுகம்
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு ரூ.40 டிக்கெட் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Advertisement

இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள் 164, ஆம்னி பேருந்துகள் 62 நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பயணிகளுக்காக புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவங்கர், நேற்று மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் 4 மணி நேரத்திற்குள் 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

English Summary : Minister Sivashankar has issued a super announcement for travelers going to Kilambakkam

Read More : Ration கடை இயங்கும் நாட்களில் அதிரடி மாற்றம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..?

Advertisement