For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறுநீரகங்களின் நச்சுத்தன்மையை வெளியேற்றனுமா.? அப்போ இந்த மூலிகை வகைகள் பற்றி தெரிஞ்சிக்கங்க.!

06:12 AM Nov 23, 2023 IST | 1newsnationuser4
சிறுநீரகங்களின் நச்சுத்தன்மையை வெளியேற்றனுமா   அப்போ இந்த மூலிகை வகைகள் பற்றி தெரிஞ்சிக்கங்க
Advertisement

சிறுநீரகம் மனித உடலின் இன்றியமையாத உறுப்புக்களில் ஒன்றாகும். இதுதான் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால் நச்சுப் பொருள்கள்ள உடலில் தேங்கி பல்வேறு விதமான நோய்களையும் ஏற்படுத்தும். இதனால் நமது சிறுநீரகத்தின் நச்சுப் பொருட்களை ஆயுர்வேத முறையில் வெளியேற்றும் மூலிகை ஒன்றிணை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Advertisement

சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவும் மூலிகை சீமை காட்டு முள்ளங்கியின் வேர்கள் ஆகும். இந்த வேர்கள் ஆங்கிலத்தில் டான்டேலியன் வேர்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த வேர்களை பயன்படுத்தி சிறுநீரகத்தில் உள்ள நச்சு பொருள்களை நீக்கலாம். சீரான சிறுநீர் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.

இந்த செடியின் வேரை தண்ணீரில் போட்டு குடித்து வர சிறுநீர் கடுப்பு மற்றும் சிறுநீரக வீக்கம் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் நமது சிறுநீரகத்தை தொற்று நோய்கள் தாக்காமலும் பாதுகாக்கிறது. இந்த வேர் தவிர மஞ்சளும் சிறுநீரகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் சிறுநீரகத்தை கிருமித் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

செலரி இலைகளும் சிறுநீரக பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் சோடியம் கிட்னியில் நச்சுப் பொருள்கள் சேர்வதை தடுக்கிறது. சிறுநீரக பாதிப்பிற்கு வலி நிவாரணி மருந்துகளின் பக்க விளைவுகளும் முக்கிய காரணமாக அமைகின்றன. எனவே தேவையான நேரம் மட்டும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வது சிறுநீரக பாதுகாப்பிற்கு நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதும் நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Tags :
Advertisement