முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவி ராஜினாமா..! குஷ்பு திடீர் முடிவு...

Khushboo Resignation of membership of National Commission for Women
09:38 PM Aug 14, 2024 IST | Vignesh
Advertisement

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

Advertisement

தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு அரசியலில் கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் மறைந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரங்களை அப்போது மேற்கொண்டார். ஆனால் அவரது இருப்பு தற்போது முக்கிய பதவி வகிக்கும் சிலருக்கு பிடிக்காததால் அந்த கட்சியை விட்டு விலகினார்.

காங்கிரஸ் கட்சியில் சிறிது காலம் பயணித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

Tags :
BJPJP NaddakhushbooWomens commission
Advertisement
Next Article