Khel Ratna | மனு பாக்கர், குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது..!! கௌரவித்த குடியரசுத் தலைவர்..!!
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜன.17) நடைபெற்ற தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதும், 32 பேருக்கு அர்ஜுனா விருதும், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
கடந்தாண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ், இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
அதேபோல் ஹாக்கி, செஸ், குத்துச் சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நீது, ஸ்வீட்டி, வங்கிட அகர்வால், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முரளிதரன், அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கேல் ரத்னா விருதாளர்களுக்கு ரூ. 25 லட்சம் வெகுமதி, பதக்கம் மற்றும் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அர்ஜுனா விருதாளர்களுகு்கு ரூ. 15 லட்சம் வெகுமதி, பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.
Read More : Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய திருடன் அதிரடி கைது..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!