அயோத்தியில் சைவ உணவுகளை மட்டும் விற்க KFC-க்கு அனுமதி...!
அயோத்தியில் சைவ உணவுகளை மட்டும் விற்க KFCக்கு அனுமதி.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. 2.27 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் 90% முடிவடைந்த நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22 -ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து, 11 நாட்களில் 25 லட்சம் அயோத்திக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் கோயிலின் காணிக்கை மற்றும் நன்கொடை மதிப்பு ரூ.11 கோடியை தாண்டியுள்ளதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உண்டியலில் எட்டு கோடியும், ஆன்லைன் வழியாக ரூ.3.50 கோடி வருவாய் வந்துள்ளது.
அயோத்தியில் KFCக்கு கடை வழங்க தயார். ஆனால், சைவ உணவு வகைகளை மட்டுமே அக்கடையில் விற்பனை செய்ய வேண்டும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு 15 கிமீ சுற்றளவில் இறைச்சி விற்க அரசு சார்பில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. Dominos, Pizza Hut 'Veg-Only' && Big கடைகள் திறக்கப்பட்டுள்ளது