மோடி 3.0 அமைச்சரவையில் மிஸ் ஆன முக்கிய தலைவர்கள்!… ஸ்மிருதி ரானி முதல் அனுராக் தாக்கூர் வரை!
Key Leaders Missed: 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜக அமைச்சரவையில் ஸ்மிருதி ரானி முதல் அனுராக் தாக்கூர் வரை இடம்பெறாத முக்கிய தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.
மோடியின் 3.0 அமைச்சரவை பொறுப்பேற்றதும் நிர்மலா சீதாராமன் முதல் 33 புதுமுகங்கள் வரை பதவிகொடுக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 58 பேர் இடம்பெற்றனன். ஆனால், தற்போது 72 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிபட்சமாக, பிரதமரைத் தவிர்த்து 80 பேர் அமைச்சர்களாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர். இதில் 27 பேர் ஓபிசி வகுப்பினர், 10 பேர் பட்டியலின வகுப்பினர், 5 பேர் பட்டியலின் பழங்குடியினர், 5 பேர் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் முக்கிய அங்கமாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அந்தவகையில், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், ஸ்மிருதி இரானி, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மீனாக்ஷி லேகி, ராஜூவ் சந்திர சேகர், நாராயண் ரானே உள்ளிட்டோர் மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தபோதும், மத்திய அமைச்சராக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபர் எல்.முருகன் ஆவார். இவர் ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்?… RSS-யை சேர்ந்தவருக்கு வாய்ப்பா?