For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்.. சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்...!

Kesava Vinayakam is present at the CBCID office in connection with the case of confiscation of 4 crores at Tambaram railway station.
12:42 PM Jun 05, 2024 IST | Vignesh
பரபரப்பு     ரூ 4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்   சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்
Advertisement

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜராகி உள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூற முடியும் என உயர் நீதிமன்றம் கேசவ விநாயகத்திடம் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆஜராவதாக தெரிவித்த நிலையில் ஆஜராகி உள்ளார் . மேலும் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது சிபிசிஐடி. 4 கோடி பணம் பறிமுதல் தொடர்பான வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது சிபிசிஐடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement