For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேரளா கோடைக்கால பம்பர் லாட்டரி... ரூ.10 கோடி கிடைத்த நபர் யார்?

06:56 PM Mar 27, 2024 IST | Baskar
கேரளா கோடைக்கால பம்பர் லாட்டரி    ரூ 10 கோடி கிடைத்த நபர் யார்
Advertisement

கேரள லாட்டரித்துறை கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி முதல் பரிசான 10 கோடி ரூபாயை பையனூர் ஏஜென்சி தட்டி சென்றுள்ளது.

Advertisement

கேரள லாட்டரித்துறை ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல்களை நடத்தி வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட், கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட், விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட், பருவக்கால பம்பர் லாட்டரி டிக்கெட், திருவோணம் பம்பர் லாட்டரி டிக்கெட் மற்றும் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான குலுக்கல் மார்ச் 27 ஆம் தேதியான இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறையின் தலைமை அலுவலகமான கார்க்கி பவனில் கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான 10 கோடி ரூபாய் SC 308797 என்ற லாட்டரி எண்ணிற்கு கிடைத்தது.

இந்த அதிர்ஷ்ட லாட்டரி டிக்கெட்டை பையனூர் ஏஜென்சிதான் விற்பனை செய்துள்ளதாக லாட்டரித்துறை அறிவித்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டை பிபி தானேஷ் என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார். இந்த ஏஜென்சியின் எண் C 3472 ஆகும். ஆனால் இந்த 10 கோடி ரூபாய் டிக்கெட்டை வாங்கியவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதேபோல் இரண்டாம் பரிசான 50 லட்சம் ரூபாய் SA 177547 என்ற லக்கி எண்ணிற்கு கிடைத்துள்ளது. இந்த லக்கி டிக்கெட் எர்ணாகுளம் ஏஜென்சியில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஜென்டின் எண் மீனாட்சி லாட்டரிஸ் ஆகும். இந்த ஏஜென்சியின் நம்பர் K 5801 ஆகும். இரண்டாம் பரிசுக்கான லாட்டரி டிக்கெட்டை வாங்கியவர் யார் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மூன்றாம் பரிசான 5 லட்சம் ரூபாய் SA 120172 (சித்தூர்), SA 656810 (பையனூர்), SB 328267 (கொல்லம்), SB 374874 (திருவனந்தபுரம்), SC 352024 (திருச்சூர்), SC 375651 (எர்ணாகுளம்), SD 344531 (பாலக்காடு), SD 385690 (கண்ணூர்), SE 408436 (திருச்சூர்), SE 430966 (கொல்லம்), SG 372711 (பாலக்காடு), SG 375079 (எர்ணாகுளம்) ஆகிய 12 எண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள லாட்டரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் தங்களின் லாட்டரி டிக்கெட்டின் எண்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5000 ரூபாய்க்கும் அதிகமாக பரிசு வென்றவர்கள லாட்டரி அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement