"நிதி ரீதியாக ஆரோக்கியமற்ற மாநிலம் கேரளா..'! 26,000 கோடி நிதி ஒதுக்கீடு.! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை.!
நாட்டிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று, என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. கேரளாவிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மற்றும் கேரள அரசிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், இந்தக் கருத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு தவறான நிர்வாகமே காரணம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் " கேரளாவின் பொது நிதி மேலாண்மை என்பது தேசிய பிரச்சனை. அங்கு நிதி நெருக்கடி நிலை வருவதற்கு மாநிலத்தின் தவறான மேலாண்மை முக்கிய காரணமாகும். அவசர திருத்த நடவடிக்கைகள் தேவைப்படும் ஐந்து பொருளாதார அழுத்தம் உள்ள மாநிலங்களில் கேரளாவையும் இந்திய ரிசர்வ் வங்கி வகைப்படுத்தி இருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்துடன், நாட்டிலேயே மோசமான நிதி நிர்வாகத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரள அரசின் செலவு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2018-19க்கு இடையில், மாநிலத்தின் செலவு அதன் வருவாயில் 78 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017–18-ல் 2.4 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2021–2022ல் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்று அட்டர்னி ஜெனரல் அஞ்சலி, மன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி கோருவதை எதிர்த்த வெங்கடரமணி, "அரசு கடன் வாங்கிய நிதியை லாபகரமான முயற்சிகளில் முதலீடு செய்யாமல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற தற்போதைய செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மாநிலங்களின் கடன், நாட்டின் கடன் மதிப்பீட்டை பாதிப்பதாக அட்டர்னி ஜெனரல் குற்றம் சாட்டினார். "கடன் சேவையில் நாட்டின் எந்த ஒரு மாநிலம் தவறிழைத்தாலும், அது முழு இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் தெரிவித்தார் . மேலும் மாநிலங்களுக்கான கடன் வரம்புகள் பாரபட்சம் மற்றும் முறையில் வெளிப்படையான தன்மையோடு நிதி ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மாநிலத்தின் நிதிநிலையில் மத்திய அரசின் தலையீட்டிற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுவில், கேரள அரசு இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில், அட்டர்னி ஜெனரல் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசு மாநிலங்களின் நிதி நிலையில் தலையிடுவதால் மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கேரளா அரசு தனது மனைவியின் குறிப்பிட்டு இருந்தது.கேரள அரசு தாக்கல் செய்த வழக்கில், மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளது, இது கடுமையான நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று கூறியது.
மேலும் கேரளா அரசு சமர்ப்பித்திருந்த மனுவில் 26 ஆயிரம் கோடி ரூபாய் அவசரமாக மற்றும் உடனடி தேவையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது. கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் ஆளும் கட்சியினர் டெல்லியின் ஜனதா மந்திர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.