முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'கோவில் ஒன்றும் கேக் வெட்டும் இடம் அல்ல..!!' - குருவாயூர் கோவிலில் ரகளையில் ஈடுபட்ட முஸ்லீம் பெண்..!! - கேரள நீதிமன்றம் அதிரடி

Kerala HC bans videography in Guruvayur Sree Krishna Temple after Muslim vlogger shares cake-cutting video from temple premises
06:47 PM Sep 18, 2024 IST | Mari Thangam
Advertisement

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலின் நடைபந்தலில் யூடியூபர்கள் வீடியோ எடுப்பதற்கு, தடை செய்தும் , திருமணம் மற்றும் பிற மத சடங்குகளுக்கு விதிவிலக்கு விதித்தும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகக் குழு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது..

Advertisement

குருவாயூரப்பன் பக்தர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. முஸ்லிம் பெண் கோவில் நடப்பந்தலில் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது செயல் கேரள இந்து பொது வழிபாட்டு தலங்கள் சட்டம் மற்றும் 1965 விதிகளை மீறுவதாக பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பக்தர்களிடம் அந்த பெண் யூடியூப்பர் ரகளை உருவாக்கி தகராறு செய்யும் வீடியோவையும் சமர்பித்தனர்.

குருவாயூர் கோவிலிலும் அதன் வளாகத்திலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்தில் வலியுறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் ஒரு சிறப்பு பாதுகாப்பு மண்டலம் என்றும், "கேக் வெட்டும் இடம் அல்ல" என்றும் வலியுறுத்தி, கோவில் வளாகத்தில் வீடியோ எடுப்பதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய முஸ்லிம் பெண் ஜஸ்னா சலீமுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை அக்டோபர் 18ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவில், கேரள காவல்துறை சட்டம், 2011, பிரிவு 83(1) இன் கீழ் ஒரு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்புற இடங்களை, குறிப்பாக கிழக்கு 'தீபஸ்தம்பம்' வழியாக வீடியோ எடுக்க அனுமதிக்க முடியாது.. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் நடைப்பந்தலில் சிறுவயது குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட, பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, குருவாயூர் தேவஸ்தானத்தின் பாதுகாப்புப் பிரிவு மூலம் நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும். ," என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Read more ; இறந்தவர்களின் G-Mail, Facebook உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் என்ன ஆகும்? டிஜிட்டல் உயில் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

Tags :
cake-cutting videoGuruvayur Sree Krishna TempleKerala HCMuslim vlogger
Advertisement
Next Article