For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kerala | இனி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம ஊதியம்..!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!!

05:44 PM Feb 22, 2024 IST | 1newsnationuser6
kerala   இனி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம ஊதியம்     முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
Advertisement

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ”சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வேலைகள் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காக, பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்பட்டு, சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து, மாநில பல்கலைக்கழகங்களிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கேரளா, நாட்டில் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது. 1997இல் நாட்டிலேயே முதல் மாநிலமாக பெண்களுக்கு தனியாக பாலின (ஜெண்டர்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிக பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலத்தில் கேரள முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்கள் வரிசையிலும் முதலிடத்துக்கு வரவேண்டும்.

கேரளாவில், பாலின பட்ஜெட் இந்தாண்டு மொத்த பட்ஜெட்டில் 21.5 சதவீதமாக உள்ளது. 2017-18 முதல் ஆண்டுதோறும் பாலின பட்ஜெட் மாநில பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங்களில் 40 சதவீத தொழில்முனைவோர் பெண்களாவர். மேலும், புதிதாக துவங்கப்படும் தொழில் துறையில் ரூ.8,000 கோடி முதலீட்டில் ரூ.1,500 கோடி முதலீடு பெண் தொழில்முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றமடைய பெண்களுக்கு நிதி சுதந்திரம் தேவை” என்று பேசினார்.

Read More : CBSE School | ”இனி தேர்வில் புத்தகத்தை பார்த்தே எழுதலாம்”..!! சிபிஎஸ்இ கொண்டுவரும் புதிய நடைமுறை..!!

Advertisement