"ப்ளீஸ்.. எங்களை கொலை செய்து விடுங்கள்.."! கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகிய கேரள குடும்பம்.! நெஞ்சை உருக்கும் நிகழ்வு.!
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களையும் தங்களது குழந்தைகளையும் கருணை கொலை செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள கொழுவனல் பகுதியில் வசித்து வருபவர்கள் மணு ஜோசப் மற்றும் சுமிதா ஆன்டனி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது மூத்த மகன் பள்ளியில் படித்து வரும் நிலையில் மற்ற 2 சிறு குழந்தைகளும் சால்ட் வேஸ்டிங் அட்ரீனல் ஹைபர்பிளாசியா என்ற பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சால்ட் வேஸ்டிங் அட்ரீனல் ஹைபர்பிளாசியா என்பது முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பிகளை பாதிக்கும் மரபணு கோளாறாகும். சுமிதா மற்றும் ஜோசப் இருவரும் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் தங்கள் குழந்தைகள் மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அருகில் இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர்.
.
மேலும் தங்களது சேமிப்பு பணம் மற்றும் சொத்து ஆகியவற்றை விற்று குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் தற்போது தங்களிடம் எந்தவித பண வசதியும் இல்லாததால் தங்களது குழந்தைகளின் மருத்துவச் செலவை பார்த்துக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர். குழந்தைகளை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள வேண்டிய இருப்பதால் யாராவது ஒருவர் குழந்தைகளின் அருகில் இருக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வேலையும் இல்லாததால் போதிய வருமானம் இல்லாத நிலையில் தங்களது மூத்த குழந்தையின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் உதவி கூறிய நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை விசாரித்தும் எந்த பலனும் இல்லை என சுமிதா தெரிவித்திருக்கிறார். மேலும் தங்களது குழந்தைகள் கண் முன்னே கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை என தெரிவித்த பெற்றோர் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறுவதைத் தவிர வேறு வழி இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். தங்களையும் தங்களது குழந்தைகளையும் கருணை கொலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
.