கேரளாவில் இரண்டாவது Mpox தொற்று உறுதி.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தத அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில வாரத்துக்கு முன்பு துபாய் சென்று வந்த கேரள இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. முதலில் அதிக காய்ச்சல் காரணமாக மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் கேரளாவில் சேர்ந்த மற்றொரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் எர்ணாக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 14 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை தயார் நிலையில் இருப்பதாகவும், நிலைமை தீவிரமடைந்தால் அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தன.
Read more ; புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு சிக்கல்.. கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு..!! – தமிழக அரசு அதிரடி