கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கே.. அதானி குழுமத்திற்கு கென்யா நீதிமன்றம் விதித்த தடை..!!
கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை (ஜேகேஐஏ) அதானி குழுமத்தின் கையகப்படுத்துவதை கென்யாவின் உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடுத்துள்ளது.
சீனா பல வருடங்களாக ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தை வைத்திருக்கும் வேளையில், கௌதம் அதானியும் இதே பாதையில் பயணிக்கக் கென்யாவில் விமான நிலைய திட்டத்தில் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் கடந்த வாரம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானிக்கு, நைரோபியின் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்க உரிமை வழங்கப்பட இருந்தது.
கென்யா ஏவியேஷன் தொழிலாளர்கள் சங்கம் கையகப்படுத்துதலுக்கு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்தது, சாத்தியமான வேலை இழப்புகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி. தொழிற்சங்கம் முன்னதாக வேலைநிறுத்தத்தை அறிவித்தது, ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கென்ய அரசாங்கத்தை வலியுறுத்தியது.
இந்த நிலையில், கென்யாவின் உயர் நீதிமன்றம், இந்தியாவின் அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், கென்யா அரசிற்கும் இடையேயான 1.85 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கென்யாவின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அடுத்த தீர்ப்புகள் வரும் வரை ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Read more ; மகளிர், ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!