ரூ.10 லட்சம் காப்பீடு முதல் குழந்தைகளின் கல்வி செலவு வரை.. ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கெஜ்ரிவாலின் 5 வாக்குறுதிகள்..!!
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக்கு இந்த தேர்தல் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான பாஜக முழு முனைப்பில் இருந்து வருகிறது.
டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் இப்போது இருந்த இடமே தெரியாமல் அழிந்து போய் கிடக்கிறது. இந்தியா கூட்டணியைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியுடன் கை கோர்க்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் உஷாராகிவிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கடும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஐந்து பெரிய உத்தரவாதங்களை அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிவிப்பு குறித்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தந்து அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கெஜ்ரிவாலின் 5 உத்தரவாதங்கள் :
* ஒவ்வொரு ஓட்டுனருக்கும் ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு
* ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு.
* மகள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் உதவி
* தீபாவளி பண்டிகை ஹோலி என ஆண்டுக்கு இரண்டு முறை சீருடைக்கு ரூ.2500
* குழந்தைகளின் கல்வி செலவு
கிழக்கு டெல்லியின் கோண்ட்லி பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களை சந்தித்த போது இந்த ஐந்து உத்தரவாதங்களை கெஜ்ரிவால் அறிவித்தார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்திற்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி உருவான 2013 ஆம் ஆண்டு வரை டெல்லியின் ஆட்டோ ஓட்டுனர்களுடனான தொடர்பு பற்றி அவர் கூறினார். டெல்லி முன்னாள் முதல்வர் கோண்ட்லி தொகுதியில் ஆட்டோ ஓட்டுனரின் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார்.
Read more ; கவனம்.. ஒரே நாளில் இந்த தொகைக்கு மேல் பணம் பெற்றால்… வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..