For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதல் கணவருடன் தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..!! திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்..!!

Actress Keerthy Suresh attended Vijay's Pongal celebrations with her husband Antony.
02:37 PM Jan 17, 2025 IST | Chella
காதல் கணவருடன் தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்     திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி பரபரப்பாகவும் செயல்பட்டு வருபவர் விஜய். இவர், தற்போது எச். வினோத் இயக்கத்தில் "தளபதி 69" என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சன்னி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மேலாளர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், விஜய், கதிர், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார்.

வீடியோவை காண : https://www.instagram.com/reel/DEzA0IORbIa/?utm_source=ig_embed&ig_rid=a8d0a37d-40a5-4abc-b4ab-d081035b3e2e

இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் சர்ப்ரைஸ் விசிட்டாக கலந்து கொண்டார். அவருடன் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கணவர் ஆண்டனி உடன் விஜய்யின் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பாக வீடியோவை ஜெகதீஷ் பழனிசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Read More : பரந்தூர் போராட்டக்குழுவை சந்திக்கிறார் விஜய்..!! போலீசிடம் அனுமதி கேட்டுள்ள தவெக..!! ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு..!!

Tags :
Advertisement