முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவர்ச்சி உடை.... எனது வேறொரு பக்கத்தை பார்க்க முடிந்தது - நடிகை அவிகா கோர்

09:05 AM May 16, 2024 IST | shyamala
Advertisement

பிரபல நடிகை அவிகா கோர் கவர்ச்சி புடவை அணிந்து நடனமாடியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிகா வது என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அவிகா கோர். அந்த தொடர் மூலம் அவர் ஏகத்திற்கும் பிரபலமானார். வளர்ந்த பிறகு தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் ரசலும் இணைந்து முதல்முறையாக பாலிவுட் பாடல் ஒன்றில் நடனம் ஆடியுள்ளனர்.

Advertisement

ரசலும் நடிகை அவிகா கோரும் இணைந்து ஆடியுள்ள "லட்கி து கமால் கி" என்ற இந்தி பாடல் கடந்த 9-ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கி இருக்கியிருந்தார். கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் இப்பாடலை தயாரித்தனர்.

இந்நிலையில், இப்பாடலில் நடனமாடியது குறித்து அவிகா கோர் கருத்து தெரிவித்துள்ளார். பலாஷ் முச்சல் எனது நண்பர், அவர் என்னிடம் ரசலை வைத்து ஒரு பாடலை இயக்க உள்ளதாக கூறினார். ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த பாடலை கேட்டபோது, எப்படியாவது இதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது பலாஷ் முச்சலிடம் நானும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்.

பெரும்பாலான கதாபாத்திரங்கள் சீரியஸாகவே நடித்த நான், தற்போது ரசலுடன் இந்த பாடலில் நடனமாடியது புதுவிதமாக இருந்தது. இதில், எனக்கு கவர்ச்சி புடவை அணிந்து, எனது வேறொரு பக்கத்தை ஆராய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் நடனமாடுவது எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?

Advertisement
Next Article