கவரப்பேட்டை ரயில் விபத்து: தர்பங்காவிற்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட பயணிகள்..!
கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த பயணிகள் சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவிற்கு புறப்பட்டனர்.
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்றுகொண்டிருந்த பாக்மதி விரைவு ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் கவிழ்ந்தது. ரயிலில் பயணித்த 1400 பேரும் கவரப்பேட்டையில் உள்ள 3 தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை
தங்கவைக்கப்பட்ட பயணிகளுக்கு இரவு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்காவிற்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே ஷாப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.