முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’காலணியுடன் காவடி ஆட்டம்’..!! ’முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்’..!! அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி..!!

07:48 AM Jan 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

முருக பக்தர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Advertisement

போகிற போக்கில் விளையாட்டுப் பொருளை வைத்து ஆடுவது போல் காவடியை வைத்து ஆடுவது தமிழ் கடவுளான முருகனை அவமானப்படுத்தியதற்கு சமம் என அந்தப் பேரவையின் மாநிலச் செயலாளர் சூர்யமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ”தமிழ் கடவுளான முருகனை வேல் ஆகவும், மயிலாகவும், காவடியாகவும், சேவல் கொடியாகவும் பல்வேறு வடிவத்தில் நாம் வழிபாடு செய்து வருகிறோம். அதில் காவடியில் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி மற்றும் பல காவடிகள் பக்தியுடன் பக்தர்கள் காவடி எடுத்து இறைவனை வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாம் வணங்கும் தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போகிற போக்கில் விளையாட்டு பொருள் வைத்து ஆடுவது போல ஆடுவது இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப் படுத்தியதற்கு சமம். தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து கூட காலில் செருப்பு அணியாமல் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முருக கோவிலுக்கு பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு காவடி எடுத்து வரும் பக்தர்கள் தங்களை துன்புறுத்திக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வெறும் காலிலேயே நடந்து முருகனை வழிபடுகின்ற ஆன்மீக பூமி இது. ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற அண்ணாமலை, முருக கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனதை புண்படுவது போலவும் நடந்து கொண்டிருப்பது வேதனைக்கு உரியது.

காலணி அணிந்துதான் காவடி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் காவடியை தொடாமல் தவிர்த்திருக்க வேண்டும். சுற்றி இருக்கின்ற மக்களும் கண்டு கொள்ளாமல் ஆடிக்கொண்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உங்களுடைய செயல் மன்னிக்க முடியாத செயல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புண்பட்ட முருக பக்தர்கள் மனதிற்கு ஆறுதலுக்காகவாவது முருக பக்தர்கள் அனைவரிடமும், முருக கடவுளிடமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
அண்ணாமலைகாவடி ஆட்டம்கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவைமுருக பக்தர்கள்
Advertisement
Next Article