கட்டிப்பிடித்தால் உலக சாதனையா? மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸில் இடம்பிடித்த மாணவர்....
கானா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வனவியல் மாணவர் ஆவர். சிறுவயதில் இருந்தே அவருக்கு இயற்கை மீதான ஆர்வமும் கொண்டவர். எனினும், அதனை பாதுகாப்பதிலும் மிகுதியான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கானாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் வனவியல் துறையில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார் அபுபக்கர் தாஹிரு.
அதனை தொடர்ந்து, அமெரிக்காவின் அலபாமாவுக்குச் சென்று ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், வனவியலில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள டஸ்கெகீ தேசிய வனப்பகுதியில் சாதனை முயற்சி ஒன்று நடத்தப்பட்டது.
அந்த முயற்சியில், அபுபக்கர் மரங்களை விரைவாக கட்டிப்பிடிக்க வேண்டும், சராசரியாக நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடிக்க வேண்டும். ஒரே தடவையில் மரத்தைச் சுற்றி இரண்டு கைகளாலும் கட்டிப்பிடிக்க வேண்டும், அப்படி கட்டிப்பிடிக்கும்போது மரங்களுக்கு சேதம் ஏற்பட கூடாது என்பதே விதியாகும்.
இந்த முயற்சியில் அபுபக்கர் தாஹிரு, ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் என ஒரு மணி நேரத்திற்குள் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். அவரது இந்த சாதனைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
link : https://www.instagram.com/reel/C6jJQNKqOyD/?utm_source=ig_embed&utm_campaign=loading