கதுவா தாக்குதல்!. பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!. தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்!
Kathua attack: கதுவா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பாத்நோட்டா கிராமம் அருகே, கடந்த மாதம் ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தில் ரோந்து பணிக்காக சென்றனர். அப்போது திடீரென அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்ப வத்தில் ஈடுபட்டவர்கள், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் துணை இயக்கமான 'காஷ்மீர் டைகர்ஸ்' என்ற பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள், நம் நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி, இத்தகைய தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்துஉள்ளனர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் கதுவா போலீசார், இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய நான்கு பயங்கரவாதிகளின் முகத்தோற்றத்துடன் கூடிய வரைபடத்தை, சமூக வலைதளங்களின் வாயிலாக வெளியிட்டனர். இவர்களை பற்றி தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
Readmore: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை!. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!.