நீங்க சொல்வது தான் சட்டமா.. தியேட்டர்ல உங்க படம் மட்டும் தான் போடணுமா? - ரெட் ஜெயண்ட்க்கு எதிராக பரபரப்பு டிவிட்
திரைப்பட விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா என்பவர், சமூக வலைத்தளம் மூலமாக துணை முதலமைச்சர் உதயநிதிக்கு ட்விட் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பதிவில், " சமூக நீதி, சமத்துவம், எல்லாரும் சமம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கைகள் தமிழ் சினிமாவுக்கு பொறுந்தாதா துணை முதலமைச்சர் உதயநிதி அண்ணா..?
இன்னைக்கு தமிழ் சினிமால ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான் சட்டம், அவர்கள் சொல்வதுதான் முடிவு… அத மீறி யாரும் எதுவும் பண்ணகூடாது.. இது என்ன எழுதபடாத சட்டமா? ரெட்ஜெயிண்ட் தவிர யாரும் இங்க படம் ரிலீஸ் பண்ணகூடாது, அப்படி பண்ணுனாலும் தியேட்டர் கிடைக்காது, இப்படி அடக்குமுறை பண்ணி 90% பட தயாரிப்பாளர்கள அவங்களுக்கு வேண்டப்பட்ட 2,3 பினாமி நிறுவனம் மூலம் மட்டுமே படத்த ரிலீஸ் பண்ணனும்னு ஒரு சூழலை உருவாக்கி மொத்தமா தொழில் சுதந்திரம் இல்லாம பண்ணிட்டாங்க..
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், நடிகர்கள், சினிமா சங்கங்கள் எதுக்குமே சுதந்திரம் இல்ல, எல்லாத்துலயும் மறைமுகமா அவங்க தலையிடுறாங்க… எந்த சங்கம் மீட்டிங் போட்டு எந்த முடிவு எடுத்தாலும் அவங்ககிட்ட கேட்கணும்னு கட்டுபடுத்துறாங்க.. யாருமே வாய திறந்து பேசாம இருக்கறதுனால அவங்க பண்ற அத்துமீறல் எல்லாம் உங்களுக்கு தெரியல போல…
தீபாவளிக்கு 4 படம் ரிலீஸ் ஆகுது, உங்கள் நிறுவனம் வெளியிடும் 2 படத்துக்கு மட்டும் தான் தியேட்டர் போடனும் மத்த படங்களுக்கு 1 ஷோ கூட தர கூடாதுனு மிரட்டி தொழில் பண்ணிட்டு இருக்காங்க. 1 அல்லது 2 தியேட்டர் இருக்க இடத்துல மத்த படங்களுக்கு 1ஷோ கூட போடகூடாதுனு மிரட்டி படம் போட வெச்சி இருக்காங்க.. தீபாவளிக்கு 5 ஷோ Special Permissionக்கு அந்த 1 extra showல வேற படம் ஏன் போடல…
இதுக்கு பேசாம ஒரு சட்டம் போட்டு Tasmac மாதிரி CINEMACனு ஒரு துறைய உருவாக்கி தமிழ் சினிமாவ அவங்க கிட்ட மொத்தமா கொடுத்துடுங்க. இதுக்கு பதில் சொல்ல 2,3 தியேட்டர்காரங்கள செட் பண்ணி வெச்சி அப்படி எல்லாம் இல்ல நாங்க விருப்பபட்டு தான் சுதந்திரமா படம் போடுறோம்னு பொய் பேச வைப்பாங்க அத நீங்க நம்பவேண்டாம்..
மொத்த சினிமாகாரங்களும் உங்க நிறுவனத்தின் அடக்குமுறைனால உங்க மேலயும், உங்க ஆட்சி மேல வருத்தத்துல இருக்க, விஜய் கட்சிக்கு சினிமாகாரங்க நிறைய ஆதரவு தெரிவுச்சதுக்கும் இது ஒரு மறைமுக காரணம் அதுல ஒரு முன்னணி இயக்குனரும் இவங்களால பாதிக்கப்பட்டவருதான்.. நல்ல நம்பிக்கையான ஆட்கள வெச்சி நீங்களே நல்லா விசாரிச்சு பாருங்க சினிமாகாரங்களுக்கு உங்க நிறுவனம் மேல இருக்க அதிருப்தி தெரியும்…
எதாவது மிரட்டல் விட்டு என் வாயையும் அடைக்க பார்ப்பாங்க… இல்ல எனக்கு நெறுக்கமானவங்கள தொந்தரவு பண்ணுவாங்க... ஆனாலும் இந்த அநியாயத்த எல்லாம் யாராவது பேசனும் உங்களுக்கு தெரியனும்னுதான் இத பதிவு பண்றன். இத்தனை மீடியா, Social Media இருக்க காலத்துல இவங்க இப்படி பண்றது உங்களுக்குதான் அவப்பெயர ஏற்படுத்தும்.
2026 தேர்தல் பிரச்சாரத்துல எல்லாம் எதிர் கட்சியும் இத கைல எடுப்பாங்க கண்டிப்பா இது பெருசா எதிரொலிக்கும். முடிஞ்சா நடவடிக்கை எடுங்க இப்படியே விட்டீங்கனா உங்க பேர ரொம்ப கெடுத்துடுவாங்க.." என்று அதில் கார்த்திக் ரவிவர்மா தெரிவித்துள்ளார்.
Read more ; ஷாக் நியூஸ்…! அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்தும் சென்னை மாநகராட்சி…!