முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கார்த்திகை தீபம்..!! திருவண்ணாமலை மலை உச்சிக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை..? அமைச்சர் சேகர்பாபு பதில்..!!

Minister of Charities Sekarbabu responded in the Legislative Assembly regarding the permission given to the public for the Tiruvannamalai Maha Deepam festival.
11:58 AM Dec 10, 2024 IST | Chella
Advertisement

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், உறுப்பினர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "சங்கக்காலத்தில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்.18ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை கிரிவல பாதையில் கள ஆய்வு செய்தார். திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் கொப்பறை தீப தீபம் இன்றியமையாத ஒன்று. இந்நிலையில், மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து வல்லுநா் குழு ஆய்வு மேற்கொண்டது.

அவர்கள் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 350 கிலோ கொண்ட கொப்பறை மற்றும் சுமார் 450 நெய்யை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். இவை இரண்டும் எடுத்துச் செல்வதற்கு தேவையான மனித சக்திகளை பயன்படுத்தி, எவ்வித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை உச்சியின் மேல் தீபம் இந்தாண்டும் எரியும்" என்று தெரிவித்தார்.

Read More : ”இதயம், நுரையீரல் சிறப்பாக இல்லையென்றால் மறதி வருமாம்”..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
அமைச்சர் சேகர்பாபுகார்த்திகைகார்த்திகை தீபம்தமிழ்நாடு சட்டப்பேரவைதிருவண்ணாமலை
Advertisement
Next Article