லட்டு குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட கார்த்தி..!! பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு..!!
நடிகர் கார்த்தி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி லட்டு குறித்து பேசியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி அதற்கு மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கு மொழியில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம், தொகுப்பாளர் லட்டு கொடுத்த போது, ”லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம்” என கூறினார்.
ஆனால், இதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது யோசித்து பேச வேண்டும்” என கூறினார்.
இந்நிலையில் தான், நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைபிடித்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Read More : பிக்பாஸ் சீசன் 8 எப்போது..? தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விஜய் டிவி..!!