முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா? பரபரப்பில் அரசியல் களம்..!!

Karnataka opposition parties have launched a campaign demanding Siddaramaiah's resignation as Chief Minister. While this has caused a political crisis there, Siddaramaiah has given an explanation regarding this matter.
04:41 PM Aug 19, 2024 IST | Mari Thangam
Advertisement

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில்  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். அதன்படி, ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

முன்னதாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அந்த வகையில், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அங்குள்ள எதிர்க்கட்சிகள் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சராக இருந்த போதும் இப்போது முதல்வராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பாஜக போராட்டத்தை நிராகரித்த அவர், அரசியலில் கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்புதான்... இதனால் அவர்கள் போராட்டம் நடத்துவது என்றால் நடத்தட்டும்.. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் எனக்குக் கவலை இல்லை.

நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது... இந்த விவகாரத்தில் நான் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அது விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் எனக்குச் சாதகமாகவே இடைக்கால நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆளுநர் எனக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதித்த வழக்கு நிச்சயம் ரத்து செய்யப்படும்" என்றார்.

முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டரில் ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் சித்தராமையா ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Read more ; மரத்துப் போனதா மனித நேயம்? வயநாடு மக்களின் EMI பணத்தை நிவாரண தொகையில் இருந்து கழித்த வங்கிகள்..!!

Tags :
Karnatakakarnataka cm siddaramaiahProtest
Advertisement
Next Article