Karnataka Scandal | "பிரஜ்வல் ரேவண்ணா பகவான் கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க முயற்சி.." சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் அமைச்சர்.!!
Karnataka Scandal: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இப்படி ஒரு கேவலமான சிந்தனையை(Karnataka Scandal) நாம் நாட்டில் பார்த்ததே இல்லை எனக் கூறிய கர்நாடக மாநில கலால் துறை அமைச்சராக இருக்கும் ராமப்பா திம்மாபூர், பிரஜ்வல் ரேவண்ணா கின்னஸ் சாதனை படைக்க முடியும் என நினைத்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் பெண்கள் பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் இருந்தார்கள. ஆனால் ஒருவேளை பிரஜ்வல் ரேவண்ணா போன்ற கேவலமான வழியில் இல்லை. ஒருவேளை ஒருவேளை பிரஜ்வல் ரேவண்ணா ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சாதனையை முறியடிக்க நினைத்திருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன. “காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திவாலாகி விட்டது, இப்போது அது சனாதன தர்மத்தை துவம்சம் செய்கிறது,” என்று பாஜக தலைவர் மோகன் கிருஷ்ணா கூறினார். இந்த கருத்து வெட்கக்கேடானது என்று கூறிய பாஜக தலைவர் ஒருவர், இந்து கடவுள்களை அவமதித்த ராமப்பா திம்மாபூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மற்றொரு நபர் காங்கிரஸும் இந்து தர்மமும் ஒன்றாக முடியாது என X சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த விமர்சனம் தொடர்பாக பதிவு செய்துள்ள இஸ்கான் தலைவர் ராதாரமன் தாஸ்"சனாதன தர்மத்தை அவமதிப்பது அவர்களுக்கு ஃபேஷன் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து பதிவு செய்துள்ள மற்றொரு பயனர் " இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் "கிருஷ்ணாவின் சாதனையை முறியடிக்கும் பிரஜ்வல்" என்று இந்த கர்நாடக அமைச்சர் கூறி இருப்பது மூர்க்கத்தனமான கருத்து சுதந்திரம் என பதிவு செய்துள்ளார். "கிருஷ்ணனும் அவனைப் போன்ற ஒரு மனிதன் என்று அவர் நினைக்கிறாரா? நீதித்துறை தானாக முன்வந்து அதிகார வரம்பை பயன்படுத்தாத வரை இது போன்ற அமைச்சர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் பதிவு செய்து இருக்கிறார்.