பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு!! - நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது. கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு பேக்கிலும் 50 மில்லி கூடுதல் பால் இருக்கும்.
கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (KFM) தலைவர் பீமா நாயக் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்டணங்களை மாற்றியமைக்கும் கூட்டமைப்பின் முடிவு குறித்து அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் நந்தினி பாலின் விலை முன்பு லிட்டருக்கு ரூ.42 ஆக இருந்த விலை இப்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இரண்டு முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ;30 வருஷம் ஆச்சு.. இப்போ நினைத்தாலும் கை, கால் நடுக்கம் வந்துவிடும்!! – நடிகர் செந்தில் எமோஷனல் டாக்