For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்.!! கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

08:29 PM Apr 10, 2024 IST | Mohisha
பிட்புல் டெரியர்  அமெரிக்கன் புல்டாக் நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்    கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி எம்.நாகபிரசன்னா அடங்கிய ஒற்றை நீதிபதி பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் பங்குதாரர்களிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதனை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

நடைமுறை குறைபாடுகளை மேற்கோள் காட்டிய நீதிபதி நாகபிரசன்னா தடை முன்முழியப்படுவதற்கு முன் பங்குதாரர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை என்பதை மேற்கோள் காட்டினார். மேலும் இந்த தடைக்கு பொறுப்பான அமைப்பு விலங்குகள் வதை சட்டத்திற்கு முரணானது எனவும் தனது தீர்ப்பின் கூறி இருக்கிறார்.

மனிதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ரோட்வீலர் மற்றும் மாஸ்டிஃப்ஸ் உள்ளிட்ட 23 இன நாய்களின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை தடை செய்யுமாறு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை மூலம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் இன்றி இந்தியா முழுவதும் இந்த தடையை விதித்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசு அதிகாரத்தை மீறியதாக நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

மேலும் இனப்பெருக்கம் மற்றும் நாய்கள் தொடர்பான இறப்பு சம்பவங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிட்டு, சட்ட நடைமுறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

மத்திய அரசு வழங்கிய தடையை நீக்கி இருப்பதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள நாய் வளர்ப்பவர்கள் மற்றும் வளர்ப்பு பிராணி ஆர்வலர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது.

குறிப்பிட்ட இன நாய்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளால் எழுப்பப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான நிபுணர் குழுவை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைத்துள்ளது.

Read More: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம்..!! – பயணியின் ஆடை மீது விமர்சனம்!

Tags :
Advertisement