முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை" கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

The Karnataka High Court has ordered an interim stay on Yeddyurappa's arrest in the case of sexually harassing a girl.
08:00 PM Jun 14, 2024 IST | Mari Thangam
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் சட்ட உதவி கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

மாநில அரசு விசாரணையை சிஐடியிடம் ஒப்படைத்தது. எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டு அவர் மீது போக்சோ வழக்குப் தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து, போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு எதிராக 1வது விரைவு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் 81 வயதான முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா இன்று கைது செய்யப்படும் சூழல் இருந்தது.

இதனிடையே இன்றைய தினம் தனக்கு எதிரான பிடிவாரண்டுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தடை பெற்றுள்ளார். ”எடியூரப்பா முழு ஒத்துழைப்பு வழங்குவதால் அவரை எந்த வகையிலும் கைது செய்யக்கூடாது. எனவே, அத்தகைய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. வரும் 17 அன்று ஆம் தேதி ஆஜராகப் போகிறேன் என்று அவர் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். அதன்படி அவர் நிச்சயம் ஆஜராவார்” என்று எடியூரப்பாவின் வழக்கறிஞர் சந்தீப் பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மைனர் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கில், எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த மறுநாளே உயர் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வந்திருப்பது அவருக்கு தற்காலிக ஆறுதல் அளித்துள்ளது.

Read more ; சட்டவிரோத சிவன் கோயிலை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!!

Tags :
#Yediyurappa arreskarnataka ex cmpocso caset #Yediyurappa BJPyediyurappa
Advertisement
Next Article