பாஜகவிற்கு தரமான பதிலடி.! காங்கிரஸ் அதிரடி.! ஹிஜாப் தடையை நீக்கிய முதல்வர் சித்தராமையா.!
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசால் அமலில் இருந்த ஹிஜாப் தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் சித்தராமையா. இது தொடர்பாக மைசூரில் நடைபெற்ற விழாவின்போது அவர் இந்த அறிவிப்பை தெரிவித்திருக்கிறார்.
பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மிகப்பெரிய போராட்டம் பிடித்த நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்திருந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோம் இந்த தடை நீக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. சித்தராமையா இரண்டாவது முறையாக கர்நாடக மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாரதிய ஜனதா அரசால் கொண்டுவரப்பட்ட ஹிஜாப் தடையை நீக்கி இருக்கிறார். இது தொடர்பாக மைசூரில் பேசியிருக்கும் அவர் இஸ்லாமிய பெண்கள் தாராளமாக ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லலாம். உணவு மற்றும் உடை என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உடை மற்றும் ஜாதிகளின் அடிப்படையில் மக்களை துண்டாட நினைக்கிறார். மக்கள் அனைவரும் சமமானவர்கள். ஹிஜாப் தடையை திரும்ப பெறுவதற்கு நான் தெரிவித்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.