For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Karnataka | ராமநகர மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!!

Karnataka Cabinet Approves To Rename Ramanagara District to Bengaluru South
04:51 PM Jul 26, 2024 IST | Mari Thangam
karnataka   ராமநகர மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

சில நாட்களுக்கு முன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ராமநகரா மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என பெயர் மாற்றும் திட்டத்தை வலுப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து, ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்ற (மாநில) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2007 ஆகஸ்ட் மாதம் JD(S)-BJP கூட்டணியில் ஹெச்.டி.குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது, ​​ராமநகரா மாவட்டம் நிறுவப்பட்டது. இப்போது ஜேடி(எஸ்) சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் குமாரசாமி, அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். மாவட்டத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றினால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக குமாரசாமி ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; சற்றுமுன்.. வெளியானது 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்..!! எப்படி தெரிந்துகொள்வது?

Tags :
Advertisement