முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடுங்கும் கன்னியாகுமரி..!! ரத்த வாடையை மோப்பம் பிடித்த நாய்..!! மர்ம பையில் கிடந்த தலை, உடல்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

They were shocked to see Maria Sandhya's body in pieces inside the bags.
10:57 AM Dec 20, 2024 IST | Chella
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து (36). இவருடைய மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் நிறுவனத்தில் மரிய சந்தியா வேலைபார்த்து வந்தார். மாரிமுத்துவுக்கு தனது மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்த காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மரிய சந்தியா வீட்டுக்கு வரவில்லையாம்.

Advertisement

நேற்று மதியம் மரிய சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அஞ்சுகிராமம் 4 வழிச்சாலை பகுதிக்கு வருமாறு அவருடைய கணவர் மாரிமுத்து அழைத்துள்ளார். அதன்படி, அங்கு வந்த மரிய சந்தியாவை, மாரிமுத்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அங்கும் சண்டை வெடித்துள்ளது. இதனால், மனைவியை கொலை செய்த முடிவெடுத்து, டிவி.யை ஆன் செய்து அதிக சத்தத்துடன் வைத்துள்ளார். பின்னர் அரிவாளால் மரிய சந்தியாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலையை மறைக்க மனைவியின் தலையை தனியாகவும், உடலை இரண்டு துண்டுகளாகவும் வெட்டி 3 பேக்குகளில் போட்டு அடைத்துள்ளார். பின்னர், அந்த பேக்குகளை தரையோடு, தரையாக இழுத்தவாறு வெளியே கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேக்குகளில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், அந்த பகுதியில் நின்ற நாய், ரத்தவாடைக்கு தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். பேக்கில் மாட்டு இறைச்சி இருப்பதாக மாரிமுத்து அவர்களை திசை திருப்பியுள்ளார். ஆனாலும், அவர்கள் மாரிமுத்து வைத்திருந்த பேக்குகளை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பேக்குகளுக்குள் மரிய சந்தியாவின் உடல் துண்டு, துண்டாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பேக்குகளை பறிமுதல் செய்து, மாரிமுத்துவையும் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து கணவர் தூக்கிச் சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தொடர்ந்து சரிவு..!! அதிரடியாக ரூ.880 குறைந்த தங்கம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

Tags :
கன்னியாகுமரிகொலை வழக்குபோலீஸ் விசாரணை
Advertisement
Next Article