Kanimozhi | ’போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான்’..!! ‘பாஜக பாவம்’..!! கனிமொழி எம்பி கடும் விமர்சனம்..!!
’போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம்’ என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.
கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி வெள்ளிக் கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று எடப்பாடி நாங்கள் வேறு, அவர்கள் (பாஜக) வேறு என்று கூறுகிறார். எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என சொல்கிறார். இதை யாரும் நம்ப வேண்டாம், மக்களுக்கு நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் அதிமுகவினருக்கு பங்கு இருக்கிறது. இன்று பிரிந்தவர்கள், நாளை மறுபடியும் இரண்டு ஸ்டிக்கர்களையும் சேர்த்து ஒட்டிக் கொள்வார்கள். போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம். நானும் இருக்கேன் நானும். இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான். எடப்பாடி பழனிசாமி இதுவரை பாஜகவையோ பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியிருக்கிறாரா?
எடப்பாடி பழனிசாமி இதை சட்டசபை தேர்தலாக கருதிக் கொண்டு, முதல்வரை பற்றிதான் பேசி வருகிறாரே தவிர, மோடியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏனென்றால் திரும்பவும் சென்று கைகட்டி நிற்க வேண்டும். அண்ணாமலை 3-வது இடத்திற்கு தான் போட்டியிட வேண்டும். வெற்றி திமுகவுக்குதான் என்பது அசைக்க முடியாத உண்மை. ஆனால், தினமும் பேட்டி கொடுத்து தவறான தகவல்களை அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருக்கலாம். அண்ணாமலை 20,000 புத்தகங்களை படித்தவர். ஐந்து வயதிலிருந்து படிக்க ஆரம்பித்து இருந்தால்கூட ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை தான் படித்திருக்க முடியும். எப்படி இத்தனை புத்தகங்களை படித்திருக்க முடியும்? படித்த புத்தகத்திலும் உண்மை கிடையாது.
நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது கனவு. ஆனால், மணிப்பூரில் இருக்கக்கூடிய மக்களின் கனவு என்னவென்றால், என்னுடைய குழந்தைகளை உயிரோடு பாதுகாக்க வேண்டும். என் குழந்தையை காணவில்லை அவர்கள் உயிருடன் வருவார்களா, அவர்கள் உயிரோடு வந்தால் போதும் எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என நினைக்கிறார்கள். இதுதான் பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் உள்ள நிலைமை” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
Read More : PM Modi | ”திமுகவின் ஆட்சியை பார்த்து மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது”..!! பிரதமர் மோடி தாக்கு..!!