For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"சினிமாவில் நடிப்பது ஈஸி.. அரசியல் கடினம்!!" ; கங்கனா ரனாவத் ஓபன் டாக்!

Kangana Ranaut said she got an offer to join politics right after her debut film Gangster. She won the Lok Sabha elections 2024 from the Mandi constituency.
10:58 AM Jun 13, 2024 IST | Mari Thangam
 சினிமாவில் நடிப்பது ஈஸி   அரசியல் கடினம்      கங்கனா ரனாவத் ஓபன் டாக்
Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

Advertisement

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் அரசியலில் இணைய என்னை அணுகினார்கள்.  எனது கொள்ளு தாத்தா 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.  இது போன்ற குடும்பத்தில் இருந்து பிரபலமடையும் பொழுது அரசியல் தலைவர்கள் அணுகுவது வழக்கம். அரசியல் கட்சிகள் எங்களை அணுகுவதும் வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் கிடையாது.  நான் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருக்க வேண்டியதில்லை.

சினிமா துறையில் நடிகை,  இயக்குநர்,  எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கிறேன். அரசியல் வாழ்க்கையில் மக்களுடன் என்னை தொடர்பு படுத்திக் கொண்டுள்ளேன். அரசியலை விட படத்தில் நடிப்பது எளிது என்பதை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். மருத்துவர்கள் போல இதுவும் கடினமான வாழ்க்கை.  பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க வருவார்கள்.  படம் பார்க்க போனால் நிம்மதி கிடைக்கும் ஆனால் அரசியல் அப்படி கிடையாது” என தெரிவித்துள்ளார்.

Read more ; ரேஷன் அட்டைதாரர்களே..!! கால அவகாசம் நீட்டிப்பு..!! இனியும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement