For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

“இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி” - சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா!

06:00 PM Apr 05, 2024 IST | Mari Thangam
“இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி”   சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா
Advertisement

இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய கங்கனா, “சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்....?" எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.

கங்கனாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவாக பாஜக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ஸ்வாதி மாலிவால் வீடியோவைப் பகிர்ந்து,``படித்த மற்றும் விவேகமானவர்களுக்கு வாக்களியுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

Tags :
Advertisement