முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டெஸ்லா நிறுவனத்தில் காணாமல் போன 65,000 காபி கப்புகள்..! அதிர்ச்சி சம்பவம்!

tesla companyil 65000 coffee mugs are missing.. ceo elan musk became sad
08:40 AM Jul 14, 2024 IST | Shyamala
Advertisement

ஜெர்மனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65 ஆயிரம் காபி கப்புகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement

அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் உலகளவில் அந்நிறுவனத்தின் 10 சதவீத பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இது டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையடையச் செய்தது.

இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆட்குறைப்பு, ட்விட்டர் பொருட்கள் ஏலம் என எலான் மஸ்க் உள்ள நிலையில், 65,000 காபி கப்புகள் மொத்தமாக காணாமல் போயிருப்பது அதற்கு மேல் அவரை கவலைக்கொள்ள செய்துள்ளதாம்.

Read more...‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? நண்பரின் பதிவால் அதிர்ச்சி..!!

Tags :
Elon Muskteslatesla coffee mug STOLEN
Advertisement
Next Article