முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கமல்ஹாசன் என்னை பிளாக்மெயில் செய்தார்...! வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு...!

10:27 AM May 02, 2024 IST | shyamala
Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். செவந்த் சேனல் கம்யுனிகேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், சரத்குமார் நடித்த கூலி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.

Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் நடித்தபோது, கெளதம் மேனன் தன்னை வைத்து என்ன படம் எடுக்கிறார் என்பது முதலில் கமலுக்கு புரியவில்லை என்றும், படம் முழுவதுமாக உருவானபோது தான் கமலுக்கு படம் பிடித்தது என்றும் கெளதம் மேனனே தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டோடு, வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் திரையரங்கில் இப்படம் ஓடி நல்ல வசூலை ஈட்டித் தந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “வேட்டையாடு விளையாடு படத்தின்போது சம்பளத் தொகை மீதமிருந்ததால் நடிகர் கமல்ஹாசன் படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். கெளதம் மேனனின் உதவி இயக்குநர்கள் எல்லாம் அவரிடம் சென்று பேசிப் பார்த்தும் அவர் சம்மதிக்கவில்லை.

பின்பு, நான் இரண்டு செக் எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து டப்பிங் பேசும்படி சொன்னேன். அதற்கு பிறகு அவர் சம்மதித்தார். படம் வெளியானபோது நாங்கள் யாருக்கும் படத்தை போட்டுக் காட்டவில்லை. கமல் சார் படத்தின் காப்பியை கேட்பதற்கு தயக்கப்பட்டு கடைசி வரை காப்பியே வாங்கவில்லை, ரஜினி சார் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அவருக்காக திரையிடலை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவித்த, மாணிக்கம் நாராயணன், சம்பளத் தொகை மீதமிருந்ததால் படத்திற்கு கமல், டப்பிங் பேச மறுத்ததே தனக்கு மிகப்பெரிய பிளாக்மெயில் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த டிரம்ப்… ரூ.7.5 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்!

Advertisement
Next Article