’கமல் ரொம்ப மோசமானவர்’..!! ’இதுக்கும் மேல கேட்காதீங்க’..!! ’அப்புறம் எல்லாத்தையும் சொல்லிருவேன்’..!! பற்ற வைத்த பாலாஜி மனைவி..!!
திறமையான நடிகர், உலக நாயகன், சிறந்த நடிகர் என பல புகழ்களை கமல் பெற்றிருந்தாலும் அவரை சுற்றி எப்போதும் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவரை பிடிக்காத பலரும் அவரின் சொந்த வாழ்க்கையை கையில் எடுத்து அவரை அசிங்கமாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அவரை ஏதோ பெண் பித்தன் போல சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பலரும் சித்திரிக்கின்றனர். குறிப்பாக, கமலை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் ரஜினி ரசிகர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இது எதற்கும் கமல்ஹாசன் எதிர்வினை ஆற்றுவதில்லை.
இந்நிலையில்தான், நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கமலை பற்றி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என அறிவுரை சொன்னார் கமல். மேலும், பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யா ஆகியோரை வீட்டிற்கு நேரில் வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி சேனல் நித்யாவிடம் பேசியபோது, “கமலை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அப்புறம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். அவரை போல மோசமானவரை நான் பார்த்ததே இல்லை” என சொல்லி பற்ற வைத்திருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை.