முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுக்கு ரகசிய திருமணம்..? திரையுலகில் திடீர் பரபரப்பு..!!

04:27 PM Dec 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

தந்தை கமல்ஹாசனைப் போலவே, எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன், அவரைப் பிரிந்த நிலையில், தற்போது சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்டுடன் லிவ் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த வண்ணமே உள்ளார்.

இந்நிலையில், ஸ்ருதி திடீரென சாந்தனுவுடன் ரகசியமாகத் திருமணம் முடிந்து விட்டது என செய்தி பரவியது. இந்த ரகசிய திருமண செய்தி வைரலான நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றையும் நான் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது இதை மட்டும் நான் ஏன் மறைக்கப் போகிறேன்?’ என கூறியுள்ளார்.

Tags :
கமல்ஹாசன்திருமணம்லிவிங் டு கெதர்ஸ்ருதிஹாசன்
Advertisement
Next Article