For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரஜினி, விஜய்யை தாக்கி பேசிய கமல்ஹாசன்..? வெடித்தது புதிய சர்ச்சை..!!

04:13 PM Dec 26, 2023 IST | 1newsnationuser6
ரஜினி  விஜய்யை தாக்கி பேசிய கமல்ஹாசன்    வெடித்தது புதிய சர்ச்சை
Advertisement

நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த், விஜய் படத்தைத் தாக்கி பேசியுள்ளதாக புது சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இந்தாண்டு வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்று, படம் வெளியானதும் ஏமாற்றம் அளித்தது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றது. இந்தப் படங்களைத் தான் நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாகத் தாக்கி பேசியுள்ளார் என்ற விஷயம் புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த வாரம் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘எத்தனை நாள் 500 கோடி ரூபாய் படம் 600 கோடி ரூபாய் படம் எனக் கொண்டாடுவீர்கள்? உங்களுக்கு நல்ல படம் பார்க்க ஆசையே இல்லை. அந்த ஆசை இல்லை என்றால் இதுதான் கிடைக்கும்' என பேசியிருந்தார். நடிகர் விஜயின் ‘லியோ’ மற்றும் ’ஜெயிலர்’ படங்களைத் தாக்கி மறைமுகமாக நடிகர் கமல் இப்படி பேசியுள்ளார் என ரசிகர்கள் காட்டமாக கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement