அதிரடி நடவடிக்கை... கல்யாணராமன் பாஜகவில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கம்...!
பாஜக மூத்த தலைவர் கல்யாணராமனை ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் போட்டியிட்ட தமிழக பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்த படுதோல்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே காரணம் என்று அக்கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திமுக உடனான கூட்டணியை அண்ணாமலை முறித்ததாலும், கட்சி நலனில் அக்கறை இல்லாத நிர்வாகிகளை உடன் வைத்திருப்பதுமே பாஜகவின் இந்த தோல்விக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை எதிர்த்து குரல் எழுப்பிய பாஜக மூத்த தலைவர் கல்யாணராமனை ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இது குறித்து பாஜக சார்பில் வெளியேற்றுள்ள அடிக்கையில்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, மாநில தலைமை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் கல்யாணராமன் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. மேலும், கல்யாணராமனுடன் கட்சி சார்பாக பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்பு வைத்திருக்க கூடாது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.