”சுற்றுலாத் தலமாக மாறும் கல்வராயன் மலை”..!! சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கல்வராயன் மலை கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலையை மாற்ற கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முன்வருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்தார். அவர் கூறுகையில், “கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரின் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சட்டப்பேரவையில் இன்று துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கல்வராயன் மலை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். கொங்கு ஈஸ்வரன் கூறுகையில், "கல்வராயன் மலை கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலையை மாற்ற கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், "கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்துவது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முதல்வரின் உத்தரவு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று பதிலளித்தார்.
Read More : ’இனி இவர்களுக்கும் முழு உடல் பரிசோதனை’..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!