கள்ளக்குறிச்சி விரைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்..!! பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல்..!!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கள்ளக்குறிச்சி விரைகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசும், மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறவுள்ளார். இந்த மரணங்களுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : கள்ளச்சாராய விவகாரம்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!! அண்ணாமலை அறிவிப்பு..!!