For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடையில்லை..! தமிழக அரசு மனு தள்ளுபடி..! உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Kallakurichi poisoning case: CBI investigation is not barred..! Tamil Nadu government dismissed the petition..! Supreme Court action..!
03:13 PM Dec 17, 2024 IST | Kathir
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு  சிபிஐ விசாரணைக்கு தடையில்லை    தமிழக அரசு மனு தள்ளுபடி    உச்ச நீதிமன்றம் அதிரடி
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது வரை 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், சமீபத்தில் சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கின் விவரங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்ற அமர்வு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More: ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது FIR பதிவு செய்யப்படும்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..

Tags :
Advertisement