முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு..!! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!!

The Madras High Court will deliver its verdict today in the case seeking to transfer the Kallakurichi poisoned liquor death case, which shook the country, to the CBI.
07:08 AM Nov 20, 2024 IST | Chella
Advertisement

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. விஷச் சாராய மரணம் தொடர்பாக, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விஷச் சாராயமான மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனாலை சப்ளைச் செய்த முக்கிய குற்றவாளியான சிவக்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அதிமுக, பாஜக, பாமக சார்பில் இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று (நவம்பர் 20) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read More : இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!! உங்க வீட்டை நீங்க நினைக்கும் பட்ஜெட்டில் கட்டி முடிக்கலாம்..!!

Tags :
chennai high courtjudgeJudicialkallakurichi
Advertisement
Next Article